18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவரை இழிவுபடுத்திய ஊராட்சி செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவரை இழிவுபடுத்திய ஊராட்சி செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 24, 2021, 4:38 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் சந்தமேடு பகுதியில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சாதிய வன்மத்துடன் கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவரை இழிவுபடுத்திய ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தி வட்டார செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாவட்ட செயலாளர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி எழுத்தர் வேல்முருகனை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது நிகழ்வில் கட்சியின் மாநில , மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!