திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
செங்கம் தளவாய் நாயக்கன் பேட்டை ஸ்ரீ மூகாம்பிகை தியான பீட ஆசிரமத்தில் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ ல ஸ்ரீ செந்தில் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் காலை முதல் விக்னேஸ்வர பூஜை இரண்டாம் கால ஹோமம், ஸ்ரீ சுக்த ஓமம், ஸ்ரீ துர்கா ஹோமம், சாந்தி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆற்காடு ஸ்ரீ பாலாம்பிகை வசிஸ்டேஸ்வரர் ஆலய குருக்கள் ஸ்ரீ சிவகுமார் அவர் தலைமையில் மகா ஓமங்கள் நடைபெற்று அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் கும்பாபிஷேக நீரானது பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பருவதமலை ஸ்ரீலஸ்ரீ செந்தில் சுவாமி தலைமையில் பக்தர்களுக்கு மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அருட் பிரசாதம் வழங்கினார் செங்கம் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர்
செங்கம் அருள்மிகு ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகம்
எழுதியவர்: mohan June 24, 2021, 12:46 pm




You must be logged in to post a comment.