18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் மருத்துவ கல்லூரி;எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் சட்டப் பேரவையில் வலியுறுத்தல்..

தென்காசியில் மருத்துவ கல்லூரி;எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் சட்டப் பேரவையில் வலியுறுத்தல்..

எழுதியவர்: mohan June 24, 2021, 10:37 am

தென்காசி பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் சட்டப் பேரவையில் வலியுறுத்தி பேசினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைகுமார் எம்எல்ஏ (23.06.2021) புதன்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக உருவாகியுள்ள தென்காசி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி கீழ்க்கண்ட ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்தினார். தென்காசியில் மருத்துவக்கல்லூரி கட்டி தரவேண்டும், சிவகிரி மலை முழுவதும் மூலிகைகள் கொட்டிக் கிடப்பதால் வாசுதேவநல்லூர் தொகுதியில் சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கிட வேண்டும், புளியங்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் கோட்டத்தை உருவாக்க வேண்டும், சங்கரன்கோவிலுக்கு மாவட்ட மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும், தென்காசி மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தனியாக அமைத்திட வேண்டும், கேரளாவுடன் பேசி 40 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் செண்பகவல்லி உடைப்பை சீரமைத்திட வேண்டும், தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டத்தில் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற கேரளாவுடன் பேசி பம்பா-அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்பேரவையில் பேசினார். மேலும் விரைவில் தமிழ் நாடு அரசு மக்களின் வளர்ச்சிக்கான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!