வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.
காட்பாடி, திருவலம், மேல்பாடி பிர்காவில் உள்ள கிராமங்களின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதும் பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பது.கோவிட் தொற்று காரணமாக மனுக்கள் ஆன்லைனில் பெறப்பட்டது.ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா கிராம கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார்.நேற்று காட்பாடி பிற்காஆய்வு செய்யப்பட்டது.சமூக திட்ட தனி தாசில்தார் செந்தில், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் தீனதயாளன் கிராம நிர்வாக அலுவலர் கோபி அலுவலக உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.திருவலம், மேல்பாடி பிர்காவின் கணக்குகள் இந்த வாரம் வரை ஆய்வு செய்யப்படும்
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்.கோட்டாட்சியர் பங்கேற்பு
எழுதியவர்: mohan June 24, 2021, 7:26 am




You must be logged in to post a comment.