18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்.

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan June 24, 2021, 6:53 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன விசைத்தறி கூடங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளிக்கு கடந்த 3ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கக்கோரி கடந்த மூன்று நாட்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்நிலையில் இன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் போடப்பட்ட கூலியை ஒருசில விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கி வருவதாகவும் மற்றவர்கள் வழங்க மறுத்து வருகின்றனர்.கூலி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்பொழுது வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சனிக்கிழமை மகாசபை கூட்டி முடிவெடுத்து வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!