17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநங்கைகளுக்கு அடையாள சான்றிதழ்; தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வழங்கினார்..

திருநங்கைகளுக்கு அடையாள சான்றிதழ்; தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வழங்கினார்..

எழுதியவர்: mohan June 23, 2021, 10:02 am

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு அடையாள சான்று வழங்கும் முகாம் 22.06.21 செவ்வாய் கிழமை நடைபெற்றது.இந்த முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள சான்றிதழ்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் வழங்கினார். திருநங்கைகள் அரசு வழங்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு அடையாள சான்றிதழ் அவசியமாக உள்ளது. அந்த வகையில் திருநங்கைகள் பயன்பெறும் பொருட்டு தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடைபெற்ற அடையாள சான்று வழங்கும் நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் 25 திருநங்கைகளுக்கு அடையாள சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில் உறைவிட மருத்துவா் அகத்தியன், மனநல மருத்துவா் நிா்மல், செவிலிய கண்காணிப்பாளா் பத்மாவதி, சமூக நலத்துறை மாவட்ட அலுவலா் சரஸ்வதி ஆகியோா் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் கூறுகையில், அனைத்து திருநங்கைகளும் பயன் பெறும் வகையில் அடையாள சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!