17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் 4 துப்பாக்கி தோட்டவுடன் வாந்த நபரால் பரபரப்பு, போலீஸார் விசாரணை.

மதுரை விமான நிலையத்தில் 4 துப்பாக்கி தோட்டவுடன் வாந்த நபரால் பரபரப்பு, போலீஸார் விசாரணை.

எழுதியவர்: mohan June 21, 2021, 7:30 am

ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை பயணம் செய்வதற்காக  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வந்தனர்.அப்போது மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை கருவி மூலம் சோதனை செய்தனர் .அப்போது அந்த 4 நபர்களில் ஒருவரிடம் இருந்த உடமைகளில் சந்தேகம் அளிக்கும் வகையில் வெடிமருந்து கூடிய பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது.இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் மதுரை பெருங்குடி போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர்  சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த சக்தி மணிகண்டன் (வயது 47) என்பதும், இவர் சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.தொடர்ந்து விசாரணையில் அவர் துப்பாக்கி உரிமம் (லைசென்ஸ் ) பெற்றவர் என்பதும். தோட்டாவை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரியாது என கூறியதை தொடர்ந்து போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்து அனுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!