18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் இஸ்லாமியா பள்ளியில் சிறப்பு தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரையில் இஸ்லாமியா பள்ளியில் சிறப்பு தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2017, 12:46 pm

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் இன்று (15-12-2017) காலை 10.00 மணியளவில் மாவட்டம் தொழில் மையம் சார்பாக தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தொழிற்கடன் பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய விளக்க முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட தொழில்மையம் இயக்குனர் இத்திட்டம் சம்பந்தமான வழிமுறைகளை விளக்கினார். புதிய சிறு, குறு தொழில் முனைவோருக்கான கடன் திட்டங்கள் பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்கள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு இளைஞர்கள் அதிக அளவில் இத்திட்டத்தின் மூலம் அதிக பயன்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நடத்தப்பட்டது, ஆனால் வருகையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே இருந்தது. இதைப்பற்றி அங்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், “இன்று வெள்ளிக்கிழமை என்பதும் ஓரு காரணமாக இருக்கலாம், அல்லது வட்டி என்ற அடிப்படையினால் பொதுப்படையாக கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டியிருக்கலாம்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!