18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. கட்சி

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. கட்சி

எழுதியவர்: mohan June 19, 2021, 4:11 pm

எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்டம் சார்பில் கோரிக்கை போராட்டம் பதாகைகளை ஏந்தி கீழ வெளிவீதி அண்ணா சிலை பகுதியில் நடைபெற்றது இதில் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது செயற்குழு உறுப்பினர்கள் யூசுப், ரியாஸ், வர்த்தக அணி மாவட்ட தலைவர் லத்தீப், மகளீர் அணி மாவட்ட தலைவி கதிஜா பீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.கோரிப்பாளையம் பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் தலைமையில் நடைபெற்றது

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் தலைமையில் கட்சி அலுவலகங்கள் முன்பாகவும் நிர்வாகிகளின் வீட்டின் முன்பாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றன..இந்த கோரிக்கையை வலியுறுத்தி சமூக வலைதலங்கள் வாயிலாக மாபெரும் கோரிக்கை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கோரிக்கை பிரச்சாரத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!