18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகவூர் பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

முகவூர் பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

எழுதியவர்: mohan June 18, 2021, 6:53 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் இறைச்சி கடையில் பணியாற்றி வரும் அறிவுராஜ் மற்றும் தவமணி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.இதில் நாகராஜ் மகன் அறிவுராஜ் (வயது17) மாரியப்பன் மகன் தவமணி (வயது 18) ஆகிய இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் கிணற்றில் மூழ்கியிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரனையை துவக்கிய தளவாய்புரம் காவல் நிலைய போலீஸ்சார் இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அதிகாலைமுதல் கிணற்றில் உடலை தேடி வந்தனர்.இந்நிலையில் அறிவுராஜ் என்பவர் மட்டும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.மேலும் தவமணி என்பவரின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!