18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை 18-வது வார்டு- வைகை கூட்டுக்குடிநீர் தண்ணீர் வீணாக செல்கிறது. அலட்சியப் போக்குடன் செயல்படும் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை 18-வது வார்டு- வைகை கூட்டுக்குடிநீர் தண்ணீர் வீணாக செல்கிறது. அலட்சியப் போக்குடன் செயல்படும் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்

எழுதியவர்: mohan June 18, 2021, 6:41 am

பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை 24 மணி நேரமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் பலபகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் தண்ணீர் வீணாக செல்கிறது அலட்சியப் போக்குடன் செயல்படும் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டுவைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்புகள் செல்கிறது இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி பைபாஸ் சாலையில் உள்ள வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலை செல்கிறது என கடந்த 12ஆம் தேதி புகார் அளித்திருந்த அதன்பேரில் ஒரு அதிகாரி என்னிடம் தொலைபேசியில் பேசினார் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுகிறோம் என ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு குடம் தண்ணீருக்கு பல பகுதிகளையும் பொதுமக்கள் அங்கே பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதை பார்த்து கண்ணீர் விடுகின்றனர்.

தங்கள் வீட்டில் இதுபோன்ற குழாயில் தண்ணீர் வீணாக கண்ணை மூடிக்கொண்டு இருப்பாரா என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கேள்வி எழுப்புகின்றனர் மாநகராட்சி அதிகாரி மெத்தன போக்குடன் செயல்படுவதை மாநகராட்சி ஆணையாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையாளர் குடிநீர் குழாயை சரி உத்தரவிட வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர் இதேபோன்று பைபாஸ் சாலையில் பல பகுதிகளில் குடிநீர் வீணாக செல்கிறது இதைக் களைய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!