17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி சென்று லாரி மோதியதில் முதியவர் படுகாயம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி சென்று லாரி மோதியதில் முதியவர் படுகாயம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர்: mohan June 17, 2021, 4:44 pm

மதுரை வாடிப்பட்டி பகுதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி அவனியபுரம் நோக்கி சென்ற லாரி மதுரை பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது,எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு அருகில் வந்த போது முன் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியை இடது புறமாக முந்தி செல்ல முயன்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த,மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்காவை சேர்ந்த முருகன் என்ற 70 வயது முதியவரை மோதியதில் நிலைதடுமாறி விழுந்தவர் கால் மீது லாரியின் சக்கரங்கள் ஏறியது.இதனால் முதியவரின் கால் நசுங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை அக்கப்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு துணை ஆய்வாளர் தம்புராஜ் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு லாரி டிரைவர் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!