18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கோபால சுந்தரராஜ் ஐஏஎஸ் நியமனம்..

தென்காசி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கோபால சுந்தரராஜ் ஐஏஎஸ் நியமனம்..

எழுதியவர்: mohan June 17, 2021, 10:03 am

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட கலெக்டராக S.கோபால சுந்தரராஜ் IAS தமிழக தலைமை செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சியராக J. U சந்திரகலா இன்னும் பணியில் சேராத நிலையில் திடீரென மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக S.கோபால சுந்தர் ராஜ் IAS அறிவிக்கப்பட்டுள்ளார்.தென்காசி ஆட்சியராக அறிவிக்கப்பட்டுள்ள S.கோபால சுந்தர்ராஜ் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் அவர்களின் மகன் ஆவார். இவர் ஆரம்ப கல்வியை ராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும், நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும், உயர்கல்வி மற்றும் மேல் நிலைக் கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார். அதனையடுத்து பி.எஸ்.சி (விவசாயம் இளங்கலை) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும், முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 5-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக அரசு தற்போது விவசாயியின் மகனை பசுமை பூமியாக விளங்கும் தென்காசி மாவட்டத்திற்கு கலெக்டராக நியமனம் செய்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!