17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

எழுதியவர்: mohan June 17, 2021, 6:46 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை மனுவாக எழுதி கொடுத்து அதற்கு தீர்வு காணும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நடைபெற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் குறைதீர்ப்புக்கு என்று தனியாக ஒரு முகாம் மையத்தை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார் அதனடிப்படையில் ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிரந்தரமாக செயல்படக்கூடிய மையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகாருக்கு உடனடியாக ரசீது வழங்கப்பட்டு அந்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் இரண்டு நாட்கள் வந்து பார்வையிட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த முகாமை தெரிவித்ததாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

புகார் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் நகராட்சி மையத்தில் மபுகார் மனுக்களை அளித்து மனு ரசிதுகளையும் வாங்கிச்சென்றனர் இதற்கு தீர்வு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி என பொதுமக்களும் தெரிவித்தனர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமமூர்த்தி , மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!