18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா கால நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா கால நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: mohan June 16, 2021, 7:15 pm

தென்காசி அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கொரோனா காலத்தில் சேவையாற்றிய மருத்துவமனை ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்டம் “தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்” சார்பில் “தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை” பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் (அரிசி மற்றும் பருப்பு) வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார். தென்காசி அரசு மருத்துவனை உறைவிட மருத்துவர் S.அகத்தியன் முன்னிலை வகித்தார்கள். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார், மாவட்டத் தலைவர் பாபு வேலன், மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்டப் பொருளாளர் இராமநாதன், மாவட்ட துணைத் தலைவர் வின்சென்ட், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!