18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு கூட்டம்..

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2021, 12:40 am

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  நகர் செயலாளர் பக்ருதீன் அலி  வரவேற்புரை ஆற்றினார்.

மேலும்  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழுகுழு உறுப்பினர் சுபைர் ஆபிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் தலைவர் அஹமது நதீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து கிளைகளின் தலைவர்களும் பங்கு கொண்டனர்.

இக்கூட்டத்தில்  வரக்கூடிய 21ஆம் தேதி sdpi கட்சியின் 13ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது

அதேபோல் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக நகர் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன்  நன்றியுரை ஆற்றினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!