17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்கள் வழங்கிய தென்மலையனூர் அறக்கட்டளை

கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்கள் வழங்கிய தென்மலையனூர் அறக்கட்டளை

எழுதியவர்: mohan June 15, 2021, 12:57 pm

கொரானா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் உட்பட நடுத்தர வர்க்கத்தினர் வேலையில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு ஊக்கத்தொகை, நிவாரண பொருட்கள் என்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது, மேலும் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வளர்களும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.அந்தவகையில் மதுரை அரசரடி பகுதியை சேர்ந்த பட்டதாரியான சக்திமுரளி என்பவர் தென்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அறக்கட்டளை தொடங்கி நரசிங்கம் கிராமம் அருகே கோவில் கட்டி வருவதோடு ஆன்மிக பொதுச் சேவையாற்றி வருகிறார்.இந்நிலையில் கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும்வகையில் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் என்று வீட்டிற்கு தேவையான பொருட்களை நிவாரண பொருட்களாக வழங்கியுள்ளார்.இவரின் ஆன்மிக பொதுச் சேவைக்கு அப்பகுதி பொதுமக்களும் சமுக ஆர்வார்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!