17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan June 15, 2021, 12:03 pm

பெட்ரோல்-டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து செங்கம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.விவசாய சங்க ஒன்றிய தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார் மாவட்ட செயலாளர் எம் சிவகுமார் கண்டன உரை நிகழ்த்தினார் விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் புரட்சி ராஜன், விவசாய சங்க மாவட்ட தலைவர் கணபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் பிரகாஷ், இடைக் கமிட்டி உறுப்பினர் வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!