17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கொரோனா ஊரடங்கில் முடங்கிய தொழில் கந்துவட்டி தொல்லை- வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.

மதுரையில் கொரோனா ஊரடங்கில் முடங்கிய தொழில் கந்துவட்டி தொல்லை- வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.

எழுதியவர்: mohan June 15, 2021, 11:40 am

மதுரை மாநகர் மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது தெருவில் வசிக்கும் முஹமது அலி என்பவர் திருமணமான நிலையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அதே பகுதியில் உணவகம் வைத்து நடத்திவரும் இவர் கடையை மேம்படுத்துவதற்காக தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 3லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக உணவகம் மூடப்பட்ட நிலையிலும் போதிய வருமானம் இல்லாத நிலையில் கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக கூடுதல் வட்டி கேட்டு தொல்லை அளித்ததாகவும், வாங்கிய தொகையை விட அதிகளவு செலுத்திய நிலையிலும் தொடர்ச்சியாக வீட்டிற்கு வந்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி தனது தற்கொலைக்கு அவர்களே காரணம் என கூறி நேற்றிரவு தற்கொலை வீடியோ வெளியிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு வட்டிதொகையை கேட்டு செல்வக்குமார் அவரது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தொல்லை அளித்து இழிவுபடுத்தியதாகவும், தனது நண்பர்களும் எனக்கு உதவிய நிலையிலும் வட்டிதொகையை கட்ட முடியாத தற்கொலை செய்வதாகவும் எனது தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும் , தனது உயிரிழப்பிற்கு பின் தனது மனைவிக்கு நண்பர்களுக்கோ தொல்லை தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் தவித்துவருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!