17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது கண்டித்து மதுரையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது கண்டித்து மதுரையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: mohan June 14, 2021, 11:47 am

தமிழ்நாட்டில் கொரோனா பெறுந்தொற்று இரண்டாவது அலையின் தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் மது கடைகள் தமிழக அரசு திறக்க உள்ளது.இதனைக் கண்டித்து, பாஜகவினர் மதுக்கடைகளை திறக்காத என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி மதுரை பாஜக அலுவகத்தில் முன்பு மாவட்டத் தலைவர் சீனிவாசன், அதேபோல் நரிமேடு பகுதியில் பாஜக மூத்த நிர்வாகி டாக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், கலந்துகொண்டவர்கள் டீக்கடைகள் பெட்டி கடைகள் திறக்க அனுமதி இல்லாத நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டார்கள் நிரந்தரமாக மதுக்கடையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!