18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை பகுதியில் அரசு மருத்துவமனை; வீ.கே.புதூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..

சுரண்டை பகுதியில் அரசு மருத்துவமனை; வீ.கே.புதூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..

எழுதியவர்: mohan June 13, 2021, 10:23 am

சுரண்டை பகுதியில் பொதுமக்களின் அரசு மருத்துவமனை கோரிக்கையை ஏற்று அதற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில் வீ.கே.புதூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுரண்டையில் அரசு ஆஸ்பத்திரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் வகையில் வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, ஆர் ஐ மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சுரண்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆஸ்பத்திரி‌ அமைப்பதற்க்கான சாத்தியக்கூறுகள், போதிய இட வசதி, போக்குவரத்து வசதி, நோயாளிகள் வந்து செல்லும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!