17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் முறைகேடு. கடும் நடவடிக்கை . சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் முறைகேடு. கடும் நடவடிக்கை . சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

எழுதியவர்: mohan June 13, 2021, 7:16 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள் தலைமையில் அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது முறையாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் ஆகையால் முறையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் அதில் சில இடங்களில் குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் அதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார் மேலும் அரசு உங்களுக்கு போதிய ஊதியம் வழங்கி வரும் நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக தண்ணீர் திறந்து விடாமல் தண்ணீர் திறந்துவிட பொதுமக்களிடம் பணம் கேட்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.இதை நீங்கள் சரி செய்து கொள்ளாவிட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் இதேபோன்று நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள் பேசும்பொழுதும் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமாக உள்ளது நீங்கள் திருந்திக் கொள்ள விட்டால் உங்கள் மீது சட்ட ரீதியான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் உங்களை பணி நீக்கம் செய்யவும் நேரிடும் என அதிகாரிகள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடக் கூடியவர்களை எச்சரித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!