18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேடபட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைபணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் .

சேடபட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைபணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் .

எழுதியவர்: mohan June 12, 2021, 1:46 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளல் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிப்பது, பொடிகள் தூவுவது, கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மக்களிடையே நேரடியாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, காய்ச்சல் கண்டறிவது, கிருமிநாசினி தெளிப்பது, கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களை பாராட்டி 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மலிகைபொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயச்சந்திரன் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!