18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan June 12, 2021, 7:22 am

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் பகுதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் தேசம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வீராணத்தில் ஜும்மா பள்ளிவாசல் முன்பு நகர செயலாளர்SK. காதர் மைதீன் (எ) சேட் தலைமையிலும்,முத்துப்பேட்டை தெரு ரைஸ்மில் அருகில் நகர தலைவர் புகாரி தலைமையிலும், முத்துப்பேட்டை திடல் மெயின் ரோடு அருகில் பள்ளிவாசல் கிளைத் தலைவர் செய்யது இப்ராஹீம் தலைமையிலும் சமூகஇடைவெளியுடன்,முக கவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக ஊடக அணித்தலைவர் பாப்புலர் ஹக்கீம் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!