17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் December 11, 2017, 10:14 pm

இராமநாதபுரத்தில் ஆட்சியர் வளாகத்தில் இன்று (11-12-2017) காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தில் உரிமை சட்டம், குறை கேட்பு கூட்டம் நடத்துதல், அடையாள அட்டை வழங்குதல், வேலை வாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு போன்ற 8க்கும் மேற்பட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர். தோழர்.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜீவா சிறப்புரையாற்றினார். இவர்களுடன் சங்கத்தின் பல முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் தில்லைமணி நன்னியுரையாற்றினார். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!