18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி தனியார் மருத்துவமணையில் செவிலியர் மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரணை.

உசிலம்பட்டி தனியார் மருத்துவமணையில் செவிலியர் மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரணை.

எழுதியவர்: mohan June 5, 2021, 12:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமணையில் (பூபதியம்மாள் மருத்துவமணை) செவிலியாராக கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் ஜோதில்நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் சுப்புலட்சுமி (23).இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் கடநத ஒரு வாராமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 3 நாட்களுக்கு முன் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருந்ததால்தான் பணிபுரிந்த மருத்துவமணையிலேயே தனது தந்தையுடன் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை அவரது தந்தைமுருகன் காலை உணவு வாங்க கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறை பாத்ரூமில் சுப்புலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.உடனடியாக மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்த நிலையில் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இது குறித்து இவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!