இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு இன்று கொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் தாலுகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கொரானா நோய் சிகிச்சை பெறுவதற்காக பல கிலோமீட்டர் மற்றும் பல மணி நேரம் பயணம் செய்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு செல்கின்றனர்
. எனவே அலைச்சலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் நலன் காக்கவும் இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானோ சிகிச்சை மையம் அமைத்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டுகோள் பல இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோரிக்கை மனுவை தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் பாதுஷா, நூருல் அமீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர் கொடுத்தனர்.இதற்கு முன்னர் இதுதொடர்பாக இளைஞர் மஸ்ஜித் சேவை குழு மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மூலமாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







You must be logged in to post a comment.