17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது.லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி.

காட்பாடி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது.லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி.

எழுதியவர்: mohan June 4, 2021, 10:28 am

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் வசித்து வருபவர் கவிதா (32).கவிதா பொன்னை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார்.இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன்தான் வாங்கியுள்ள நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார்.கவிதா, வெங்கடேசனிடம் ரூ 40 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாறுதல் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.இதுகுறித்து வெங்கடேசன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.காவல்துறையின் ஆலோசனைப்படி நேற்று பொன்னை அலுவலகத்தில் ரூ10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்த போதுஅங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழு சுற்றிவளைத்து லஞ்ச பணத்துடன் கவிதாவை கைது செய்தனர்.தீவிர விசாரணைக்கு பின்பு அவரை வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.கவிதாவின் கணவர் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!