18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது;பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு..

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது;பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு..

எழுதியவர்: mohan June 4, 2021, 6:58 am

செம்மொழியாம் எம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதத்திலும் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து அதன் தலைவர் கவிஞர் பேரா. அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில்,புதியதாக ‘இலக்கியமாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் விருது வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் ‘பெற்றவர்களை’ ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்றும் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பதை பொதிகைத் தமிழ்ச் சங்கம் நன்றியோடு வரவேற்கிறது. இந்த அறிவிப்புகள் தமிழ்மொழிக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். தமிழுக்கும், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் நலனுக்குமான இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!