17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எந்திரம் அமைக்க மக்கள் டீம் கோரிக்கை..

கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எந்திரம் அமைக்க மக்கள் டீம் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2021, 7:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் உடல்நிலை குறைவால் வருகிறார்கள்,  அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக வருகிறார்கள். அதில் சிலருக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நிலையில் அந்நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காக ராமநாதபுரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த குறையை போக்கும் வண்ணம்  மக்கள் டிம் சார்பில் அதன் நிறுவனர் காதர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் எந்திரம் அமைத்து தரக்கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்க இடம் கோரிக்கை மனு அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!