18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாதரை கிராமத்தில் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

மாதரை கிராமத்தில் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan June 3, 2021, 4:43 pm

மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் கொண்டபடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உத்தரவுப்படி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் ஆலோசனையின் படி மாதரை கீழ கிளை செயலாளர் ஜெயராஜ் ஏற்பாட்டில் கிளை செயலாளர்கள் முருகன் புண்ணியமூர்த்தி, கண்ணன் ஆகியோர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர். இதில் அவைத் தலைவர் சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள் தனுஷ்கொடி, சின்னபாண்டி, பாண்டி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!