17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமானூத்து கிராமத்தில் மறைந்த கலைஞர் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

சீமானூத்து கிராமத்தில் மறைந்த கலைஞர் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan June 3, 2021, 4:35 pm

உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் கொண்டபடப்பட்டது.

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சிட்குட்பட்ட கொக்குடையான்பட்டி, கருப்புகோவில், அன்னபார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் உத்தப்பநாயக்கணூர், வடக்கம்பட்டி திமுக அளைஞரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது. மேலும் உத்தப்பநாயக்கணூர் கிராமத்தில் தனியார் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது.

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!