18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல்துறை

வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல்துறை

எழுதியவர்: mohan June 3, 2021, 5:20 am

மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக கொரானா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும், கலெக்டர் அனுமதியுடனும் 4 இடங்களில் (s s காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது.

இதில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி . மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.அதை பெற்றுக்கொண்டு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!