17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி 58கிராமகால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உசிலம்பட்டி 58கிராமகால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எழுதியவர்: mohan June 2, 2021, 5:36 pm

வைகை அணையின் நீர்மட்டம் 68 அடி நிறைந்துள்ள நிலையில் 58கிராமகால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.வைகை அணையின் நீர்மட்டம் 68 அடி நிரம்பும் போது அதிலிருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் நிரம்பி பாசன வசதி பெறும் வகையில் 58 கிராமகால்வாய்ததிட்டம் ரூ120 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் உசிலம்;;;;;;பட்டிப் பகுதியிலுள்ள சுமார் 15000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.கிராம நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.கடந்த அதிமுக ஆட்சிpயின் போது திட்டம் நிறைவேற்றப்பட்டு 3 முறை சோதனை ஓட்டம் நடைபெற்ற போதிலும் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் 33 கண்மாயில் 19 கண்மாய்களுக்குத்தான் நீர் சென்றடைந்தது

. திட்டம் முழுமையாக நிறைவுபெறாததால் 58 கிராம கால்வாய் திட்;டத்திற்கு நிரந்தர அரசாணை வழங்கப்படவில்லை.இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் நிரம்பி வருவதால்; வைகை அணையின் நீhமட்டமும உயர்ந்து வருகின்றது.தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 68அடிக்கு மேல் நிரம்பிவருவாதல் வருகின்ற ஜீன் 4ம் தேதி குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதே போல் 58 கிராம கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டுமென உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை தற்போது பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளதால் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் இன்னும் சில மாதங்களுக்கு வைகை அணையில் நீர் நிரம்பிக் காணப்படும்.இதனால் 58 கிராம கால்வாயில் குறைந்தபட்சம் 50 கனஅடி தண்ணீராவது 2 மாதங்களுக்கு திறந்து விட்டால் அனைத்து கண்மாய்களும் நிரம்ப ஏதுவாக இருக்கும்.மேலும் நிரந்தர அரசாணையும் வழஙகப்பட வேண்டுமென என 58 கிராம இளைஞர்கள் குழுவின் சார்பாக சௌந்திரபாண்டியன் தெரிவித்தார்

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!