திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேகமாக பரவி வரும்
கொரானா என்ற கொடிய நோய் காரணமாக தொடர் ஊரடங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் வீட்டிலுள்ள பொதுமக்கள் வீட்டிலிருந்தே மளிகை பொருட்களை பெறுவதற்காக நடமாடும் மளிகை பொருட்கள் கடை வியாபாரத்தை அம்மைய நாயக்கனூர்பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சரவணபாண்டியன் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம்
எழுதியவர்: mohan June 2, 2021, 5:27 pm




You must be logged in to post a comment.