2 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேகமாக பரவி வரும் கொரானா என்ற கொடிய நோய் காரணமாக தொடர் ஊரடங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு
பயன்பெறும் வகையில் வீட்டிலுள்ள பொதுமக்கள் வீட்டிலிருந்தே மளிகை பொருட்களை பெறுவதற்காக நடமாடும் மளிகை பொருட்கள் கடை வியாபாரத்தை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, நிலக்கோட்டை துணை சூப் போலீஸ் சூப்பிரண்டு முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 மாடுகளுக்கும் வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் கதிரேசன், பேரூராட்சி அலுவலக தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டை பேரூராட்சியில் நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம்
எழுதியவர்: mohan June 2, 2021, 5:16 pm




You must be logged in to post a comment.