17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி

எழுதியவர்: mohan June 2, 2021, 4:49 pm

மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த மொட்டமலை பகுதியில் திருநங்கைகள், முதியவர்கள், குழந்தைகள் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி பசியால் உணவின்றி தவிப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணாவிற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் உடனடியாக மாவட்ட செயலாளர் குமார், எலக்டிரிசீயன் வடிவேல் , ஹார்விபட்டி ஆர்.வி.நண்பர்கள் குழுவினருடன் மொட்டமலை பகுதிக்கு விரைந்து நேரில் சென்று விசாரித்த போது உணவின்றி தவித்த குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். அதன் பின்பு வெஜ் பிரியாணி பொட்டலம், தண்ணீர் பாட்டில் , முககவசம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. சுமார் 106 பேருக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. முககவசம் இன்றி வந்த குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் குணா முககவங்களை முகத்தில் அணிவித்தார். மேலும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆர்.வி.நண்பரகள் தெரிவித்தனர். தங்களின் உதவிக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாக கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!