18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்.

சேத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்.

எழுதியவர்: mohan June 2, 2021, 6:05 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.குறிப்பாக சேத்தூர், தேவதானம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பல விவசாயிகள் அறுவடை செய்து நெல் களஞ்சியங்களில் வைத்துள்ளனர்.இதை கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதன் பேரில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இன்று நெல் கொள்முதல் நிலையத்தை கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கட்சியினரை கூட்டமாக கூட்டி தொடங்கி வைத்தார்.அப்போது திமுக கட்சியியை சேர்ந்த தொண்டர்கள் சமூக இடைவெளி இன்றி நோய் தொற்று பரப்பும் விதமாக கூட்டமாக நின்றனர்.தமிழக அரசு அறிவித்த விதிமுறைகள் சாமானிய பொதுமக்களுக்கு தானா? திமுக கட்சியினருக்கு இல்லையா? என்ற அளவிற்கு கூட்டமாக நின்றனர்.சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சமூக விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளி என்றிருப்பது நோய் தொற்றை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!