18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்களுக்கு வருவாய்துறை சார்பில் நிவாரண பொருட்களை கோட்டாட்சியர் வழங்கினார்.

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்களுக்கு வருவாய்துறை சார்பில் நிவாரண பொருட்களை கோட்டாட்சியர் வழங்கினார்.

எழுதியவர்: mohan June 2, 2021, 5:27 am

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கில் பசியால் தவிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் நிவாரன பொருட்கள், உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்

.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி ஊராட்சிட்குட்பட்ட சமத்துவபுரத்தில் சுமார் 50 நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா முழு ஊரடங்கால் நரிக்குறவ குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் நரிக்குறவ குடும்பங்களுக்கு வருவாய்துறை சார்பில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் நரிக்குறவ குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இதில் வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் நரிக்குறவ மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!