தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு நாளில் பசியால் தவித்து வரும் ஆதரவற்ற முதியோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உணவுகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நியோ மேக்ஸ் குழுமம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் கலந்துகொண்டு நியோ மேக்ஸ் குழுமம் உசிலம்பட்டி தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்த எல்ஐசி அழகர்சாமி மற்றும் தனசேகரன் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உசிலம்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு டிஎஸ்பி உணவு பொட்டலங்களை வழங்கினார்.
எழுதியவர்: mohan June 2, 2021, 5:13 am




You must be logged in to post a comment.