18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம். ஒரே நாளில் 500 பேருக்கு போடப்பட்டது.

நிலக்கோட்டையில் கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம். ஒரே நாளில் 500 பேருக்கு போடப்பட்டது.

எழுதியவர்: mohan June 1, 2021, 2:21 pm

உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரானா  என்ற கொடிய நோய் தொற்று காரணமாக நிலக்கோட்டை இ. பி. காலனியில் கடந்த 20 நாட்களுக்குள் 20க்கும்மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற அச்சமும் பொதுமக்கள்மத்தியில் இருந்து வரும் நிலையை அறிந்தநிலக்கோட்டை பேரூராட்சியும், அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையமும், நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்பு சங்கமும், ஜேம்ஸ் கோல்டன் சிட்டி அமைப்பும் இணைந்து நிலக்கோட்டை இ. பி காலனியில் உள்ள தான் கரணை இல்ல வளாகத்தில் 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கும் பொது மக்களுக்கு 500 பேருக்கு ஒரே நாளில் கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம் நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் வினோத், திமுக நகர செயலாளர் கதிரேசன், கரும்புச்சாலை குடியிருப்பு சங்க தலைவர் கருப்பையா, சங்கச் செயலாளர் ஜோசப், ஜேம்ஸ் கோல்டன் சிட்டி  அமைப்பு தலைவர் செந்தில், செயலாளர் சங்கர், மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் மஞ்சுளாஉள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!