18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற காட்பாடியை சேர்ந்த 3 பேர் கைது .

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற காட்பாடியை சேர்ந்த 3 பேர் கைது .

எழுதியவர்: mohan June 1, 2021, 1:30 pm

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவின்பேரில் சித்தூர் அடுத்த குடிபாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிநாத், சப் -இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையில்குடிபாலா செக்போஸ் டில்போலீசார் வாகன சோதனை செய்துகொண்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்த புகழேந்தி, சிவக்குமார், லட்சுமணன் என்று தெரியவந்தது.வாகனத்தை சோதனை செய்தபோது ஆந்திராவிலிருந்து தமிழக பகுதியான காட்பாடிக்கு மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.3 பேரையும் கைது செய்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சித்தூர் சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!