17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்துசாமிபுரம் சுகாதார கேடுகளை சீர் செய்ய சட்டமன்ற உறுப்பினரிடம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..நகராட்சி ஆணையரிடம் மனு..0

முத்துசாமிபுரம் சுகாதார கேடுகளை சீர் செய்ய சட்டமன்ற உறுப்பினரிடம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..நகராட்சி ஆணையரிடம் மனு..0

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2021, 7:14 pm

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரை முத்துசாமிபுரத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை செய்தியாக வெளியிட்டதுடன், இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் நடத்த கூடும் என கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (31/05/2021) கீழக்கரை வருகை தந்த இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் காதர்பாட்சாவிடம் முத்திசாமிபுரம் சம்பந்தமான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், முன்னாள் மண்டல செயலாளர் கட்சியின் நிர்வாகிஅசாருதீன், நகர் துணை செயலாளர் ஹபீப் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  பின்னர் அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கீழக்கரை ஆணையரிடம் மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!