18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமுமுக மருத்துவ அணி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய சிறப்பு தடுப்பூசி முகாம்..

தமுமுக மருத்துவ அணி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய சிறப்பு தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: mohan May 30, 2021, 12:02 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி சுகாதாரத்துறை மற்றும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் புளியங்குடி காயிதே மில்லத் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடத்தப்பட்டது.

இந்த முகாமை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் மற்றும் வாசு சட்டமன்ற உறுப்பினர் Dr. சதன் திருமலைக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தடுப்பூசி முகாமின் நிகழ்விற்கு தமுமுக நகரத் தலைவர் செய்யது அலி பாதுசா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்டத் தலைவர் யாகூப், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான், மமக மாவட்டத் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், மமக மாவட்டச் செயலாளர் பஷீர் ஒலி Ex MC, முஸ்லீம் மாணவர் பேரவை தேசிய இணைச் செயலாளர் அமீன், மமக மாவட்டத் துணைச் செயலாளர் மஜீத், மமக மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் பைஜி, மமக மாவட்ட இளைஞரணி பொருளாளர் சாகுல் ஹமீது நகர மமக செயலாளர் மட்டன் செய்யது மதிமுக நகர செயலாளர் ஜாஹீர் மாமாக்கு நகர இளைஞரணி செயலாளர் புளியங்குடி ஹமீது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அனீஸ் மற்றும் முகைதீன் , PAART அமைப்பின் தலைவர் முகைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமுமுக கொரோனா பேரிடர் மையத்தினர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!