18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டாபட்டியில் 97வயது முதியவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டாபட்டியில் 97வயது முதியவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

எழுதியவர்: mohan May 30, 2021, 11:34 am

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதுமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளையும் அனைவரும் செலுத்திக் கொள்ள அரசு அறிவித்துள்ள சூழலில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாகமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், அல்லிகுண்டம், உத்தப்பநாயக்கணூர், செல்லம்பட்டி மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் என பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம்கள் நகரின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு முகாம்களில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முன் கள பணியாளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.மேலும் செல்லம்பட்டி அருகே நாட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் இக்கிராமத்தைச் சேர்ந்த 97 வயது முதியவர் நாராயணசாமி ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.இது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!