17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில்லாபுரம் புதுநகர். குடியிருப்போர் நலசங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம்

வில்லாபுரம் புதுநகர். குடியிருப்போர் நலசங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம்

எழுதியவர்: mohan May 30, 2021, 7:51 am

மதுரை மாநகராட்சி பகுதியில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மிகப் பெரிய தடுப்பூசி முகாம் வில்லாபுரம் நடைபெற்றது.

காலை முதல் நீண்ட வரிசையில் உட்கார்ந்து சமூக இடைவெளி கடைபிடித்து 1000 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார துறையின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அதாவது மாநகர், கிராமப்பகுதிக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டுமென சுகாதார துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.இதன் காரணமாக இன்று திருப்பரங்குன்றம் தொகுதி வில்லாபுரம் புதுநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் சங்க தலைவர் அப்துல் காதர், செயலாளர் இப்ராஹிம் கல்தான் சேட் ,பொருளாளர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜூன் குமார் டாக்டர் உத்தரவின் பேரில் மருத்துவர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர் கொண்ட 30 பேர் குழுவினர் வில்லாபுரம் புதுநகர் பகுதியில் காலை 7 மணி முதல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் 1000 பேர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!