18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அச்சம்பத்து பகுதியில் சுகாதார துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அச்சம்பத்து பகுதியில் சுகாதார துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 29, 2021, 4:41 pm

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார துறையின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அதாவது கிராமப்பகுதிக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டுமென சுகாதார துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.இதன் காரணமாக இன்று திருப்பரங்குன்றம் தொகுதி அச்சம்பத்து பகுதியில்கொரோனா கடுப்பூசி முகாம் நடைபெற்றது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அர்ஜுன் குமார் உத்தரவின் பேரில் திருப்பங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர் கொண்ட குழுவினர் அச்சம்பத்து பகுதியில் காலை 8 மணி முதல் முறை பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் 800 பேர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்இதில் 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அச்சம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி துணைத் தலைவர் வனிதா மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கரோனா சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!