17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம்;ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம்;ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

எழுதியவர்: mohan May 29, 2021, 12:32 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி , வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் ராம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலசபாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கலசபாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் தணிக்கமலை , முக்கிய பிரமுகர்கள் கதிர்வேல், ஏழுமலை, கோபாலகிருஷ்ணன் வேடியப்பன் ,சிவா கலந்து கொண்டு தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் மருத்துவ குழுவினர், மருத்துவ செவிலியர்கள் செல்வி லில்லிமேரி ,மல்லிகா, சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் சத்யா , சிப்பந்தி காந்தி ஊராட்சி துணைத்தலைவர் திவகார் , ஊராட்சி எழுத்தர் அண்ணாமலை , மற்றும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!