17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரப்பட்டு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

காரப்பட்டு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

எழுதியவர்: mohan May 29, 2021, 12:14 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி காரப்பட்டு கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பின்னர் திமுக அரசு பதவியேற்றவுடன் காரப்பட்டு கிராம ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்துகாரப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.விழாவில் ….மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாரதி ராமஜெயம் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ , ஆறுமுகம் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தற்போது காரப்பட்டு கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் திறக்கப்பட்டுள்ளது அடித்து விவசாயம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!