17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே நூற்பாலையில் மின்சார மோட்டார் ஸ்விட்ச் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

இராஜபாளையம் அருகே நூற்பாலையில் மின்சார மோட்டார் ஸ்விட்ச் போட்ட போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

எழுதியவர்: mohan May 29, 2021, 12:10 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் வயது 50 இவர் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .வழக்கம்போல் பணிக்கு வந்த இவர் இன்று பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதற்காக அங்கு இருந்த தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார் அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் சீதாராமன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலியானார் பலியான சீதாராமன் உடலை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் விபத்து குறித்து தளவாய்புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!